×

கீழடி அகழாய்வு மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படும் அமைச்சர் தகவல்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பாஸ்கரன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், காப்பாட்சியர் ஆசைத்தம்பி ஆகியோர் அகழ்வு குழிகளில் உள்ள செங்கல் கட்டுமானம் குறித்து அமைச்சர்களுக்கு விளக்கினர். பின்னர் நிருபர்களிடம், அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியதாவது:

கீழடியில் நடந்த ஐந்தாம் கட்ட ஆய்வில் 750 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்துள்ள பொருட்கள், அவற்றின் தொன்மையை அறிய புனே மற்றும் அமெரிக்காவுக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து ஆய்வு அறிக்கை வர காலதாமதம் ஆகிறது. இதனால் சென்னையிலுள்ள மத்திய அரசின் ஐஐடியில் ஆய்வு மேற்கொள்ள பரிசீலித்து வருகிறோம். கீழடியில் 11 விதமான ஆய்வுகள் நடந்து வருகிறது. இங்கு கிடைத்துள்ள பொருட்கள் மூலம் கீழடி, சங்கக்கால தொழில் நகரமாக விளங்கியது தெளிவாகிறது. தொல்லியல் துறைக்கு கீழடி பொற்காலமாகும். அரிய பொருட்கள் கிடைத்து வருவதால் கீழடி அகழாய்வு மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister , Kilati Excavating ,extended , 15 days
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...